திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட்., எஸ்.351.

Tiruchengode Agricultural Producers Co-Operative. Marketing Society Ltd., S-351.

விவசாய விளைபொருள்களை விற்பனை செய்து தருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

"2021 ஆம் ஆண்டில் சிறந்த சங்கமாக தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் [National Cooperative Development Corporation (NCDC)] ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அவர்களால் விருது வழங்கப்பட்டது."

"நமது சங்கம் வருடத்திற்கு 500 க்கும் மேற்பட்ட, பல்வேறு கல்வி நிலையங்களில் இருந்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது."

சங்கத்தின் முக்கிய நோக்கங்கள்

  • விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுத்தல்.
  • விவசாய விளைபொருட்களின் மீது முன்பணம் மற்றும் சரக்கீட்டுக்கடன் வழங்குதல்.
  • கடன் விற்பனை இணைப்பு திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் தொகையை வசூல் செய்து கொடுத்தல்.
  • விவசாய இடுபொருட்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்தல்.
  • உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகித்தல்.
  • உறுப்பினர்களிடமிருந்து இட்டுவைப்புகள் பெறுதல் மற்றும் நகைக்கடன் வழங்குதல்.

விவசாய விளைபொருட்கள் விற்பனை மூலம் முக்கியமான சேவைகள்

  • சரியான எடை அளவு.
  • குறைவான மற்றும் நியாயமான சேவைக்கட்டணம்.
  • நியாயமான மற்றும் அதிகபட்ச விற்பனை விலை.
  • உடனடி பணம் பட்டுவாடா வங்கி பரிவர்த்தனை மூலம்.
  • விவசாய விளைபொருட்களை சேதாரம் இன்றி கையாளுதல்.
  • விவசாய விளைபொருட்களை பாதுகாக்கத் தகுந்த கிடங்கு வசதி அளித்தல்.
  • விளைபொருட்களின் மீது சரக்கீட்டுக்கடன் வசதி.
  • பருவ கால விற்பனை மையங்களின் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திலேயே விளைபொருட்கள் விற்பனைப்பணியை மேற்கொள்ளல்.
  • விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தங்குமனை வசதி மற்றும் இதர வசதிகள் அளித்தல்.

கிளைகள்

விவசாய விளைபொருட்களின் ஏல விவரங்கள்.

கேலரி