திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கொங்கணாபுரம்
கிளையில் 1971 ஆம் ஆண்டு முதல் விவசாய உறுப்பினர் பெருமக்களுக்கு
சேவை செய்யும் பொருட்டு விவசாயிகளிடம் இருந்து தரமான பால் கொள்முதல் செய்யப்பட்டு
உள்ளூர் விற்பனை மற்றும் பால் கூட்டுறவு ஒன்றியத்திற்கும் விற்பனை செய்து வருகிறது.
நாளென்றுக்கு சராசரியாக 500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பால் விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய நிகர இலாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு 50 % போனஸ் வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான மாட்டுத் தீவனங்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.