சமூக நலன் கருதி திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு தேவையான உதவிகள், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஜெனரேட்டர் வாங்குவதற்கு தேவையான நிதியுதவினை சங்கத்தின் பொதுநலநிதியிலிருந்து வழங்கி தொடர்ந்து சேவை செய்து வருகிறது.
மருத்துவ முகாம்
ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியின் போது கண் பரிசோதனை முகாம், பொது மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் ஆகியவற்றை நடத்தி வருகிறது.
நீர்மோர்பந்தல்
1980 ஆம் ஆண்டிலிருந்து திருச்செங்கோடு வைகாசி தேர் திருவிழாவின் போது சங்கத்தின் மூலம் தொடர்ந்து நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு விழாவிற்கு வரும் பக்தர்க்ளுக்கு மூன்று நாட்கள் நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி புரிதல்
பணியாளர்கள் ஓருங்கிணைந்து அருகில் உள்ள ஆதரவற்ற இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மறு வாழ்வு மையம் ஆகிய இடங்களுக்கு சென்று உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பொது
சங்கத்தின் பெட்ரோல் பங்கில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி என்ஜின் ஆயில் மாற்றி தரப்படுகிறது.
பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் வெளி மாநிலங்களில் அளிக்கப்பட்டு வருகிறது..
சங்கத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மாணவ மாணவியர் 500 க்கும் மேற்பட்டோர்க்கு சங்கத்தின் செயல்பாடுகளை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் தினம், விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.