அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், சங்கமானது திருச்செங்கோடு வட்டத்தில் முதன்மை சங்கமாக செயல்பட்டு, திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டத்திலுள்ள இணைப்புச்சங்கங்களின் 257 நியாயவிலைக்கடைகளுக்கு அனைத்து வகையான மளிகைப் பொருட்களையும் விநியோகம் செய்து வருகிறது.
சங்கத்தின் 24 நியாய விலைக்கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் பங்க் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகிய கட்டுப்பாட்டு பொருட்களும் மேலும், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி மூலம் பொதுமக்களுக்கு தேவையான ஊட்டி டீ தூள், அரசு உப்பு மற்றும் அனைத்து வகையான மளிகைப் பொருட்களையும் சிறந்த முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.