சங்கப் பணியாளர்கள் கேரள மாநிலம் கொச்சினில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது, தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு நன்மைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது, எந்தவொரு வேதிபொருட்களும் சேர்க்காமல் குளியல் சோப்பு தயார் செய்யலாம் என்று தெரிந்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு தயார் செய்வது மிகவும் எளிதான செயல்முறை என்பதாலும், சோப்பு தயாரிப்பதற்கு மூலப்பொருட்கள் குறைவாக உள்ளதாலும், நுகர்வோர் மற்றும் விவசாய உறுப்பினர்களின் நலனுக்காவும், சங்கத்தில் தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு தயாரிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும், இயற்கையான முறையில் இரசாயனங்கள் ஏதுமின்றி சுத்தமான தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பைத் தயாரிக்க திட்டமிடப்பட்டது. மற்ற மாநிலங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பினை ஏன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடாது என்று ஆராய்ந்து, தமிழக கூட்டுறவுத்துறையின் வரலாற்றிலேயே முதல்முறையாக தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு தயாரிப்பதற்கு சங்கத்தின் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஏ.விஜயசக்தி பி.ஏ., பி.எல்.ஐ.எஸ்., எம்.பி.ஏ., எச்.டி.சி.எம். அவர்களின் சிறப்பான முயற்சியில் அதற்கான பணிகள் இனிதே துவங்கப்பட்டு தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு தயாரிக்கும் நிலையத்தினை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் திரு.அ.சண்முகசுந்தரம், IAS அவர்களால் 28.07.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது.
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பின் மூலப்பொருட்கள்.
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பின் முக்கிய மூலப்பொருளான தேங்காய் எண்ணெய் இச் சங்கத்திலிருந்தே செக்கு மூலம் தயாரிக்கப்படுகிறது. சங்கத்தில் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தில் சங்கமே கலந்து கொண்டு சல்பர் இல்லாத கொப்பரை தேங்காய் வாங்கி உலர வைத்து சுத்தமான தேங்காய் எண்ணெயை சங்கத்தின் பதனிடும் பிரிவில் உற்பத்தி செய்து தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
கைகளால் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பின் நன்மைகள்.
கூட்டுறவு துறையின் வரலாற்றில் முதன் முதலில் TCMS-ல் தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு ( Hand Made) தயாரிப்பு.
இயற்கை கிளிசரின் 9% முதல் 13% வரை உள்ளதால் சருமத்திற்கு மென்மை தன்மையை கொடுக்கும். எந்தவிதமான ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது.
சருமத்தில் ஏற்படும் முதிர்ச்சி, வறட்சி, சுருக்கம் ஆகியவற்றை நீக்க உதவுகிறது.
சோப்பு தயாரிப்பில் பாமாயில், மிருக கொழுப்பு, தாவர எண்ணெய் கழிவுகள், செயற்கை எண்ணெய் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் ஏதும் பயன்படுத்துவது இல்லை.
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு பயன்படுத்துவதால் 600ml கழிவுகள் தோலின் மூலம் முழுமையாக வெளியேறுகிறது.
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு நமது சருமத்தில் உள்ள மயிர்கால்களில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்கி வியர்வை மூலம் கழிவுகள் முழுமையாக வெளியேற உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பெற உதவுகிறது.
அர்த்தநாரீஸ்வரா பிராண்டு என்ற பெயரில் தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு விற்பனை செய்யப்படுகிறது.
சங்கத்தின் பதனிடும் ஆலை மூலம் சுகாதாரமான முறையில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுவதால், தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு மிகவும் தரமானதாக இருக்கும்.
மற்ற சோப்புகளை விட நமது அர்த்தநாரீஸ்வரா பிராண்டு தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு பாரம்பரியமும், தனித்துவமும் வாய்ந்தது.
தேங்காய் எண்ணெயின் சக்தி சருமத்திற்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும், ஏற்படுத்தும் என்பது நமது பாரம்பரிய வழி தெரிந்ததே.
அர்த்தநாரீஸ்வரா தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பின் வகைகள்:
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு - கற்றாழை சோப்
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு - கஸ்தூரி மஞ்சள் சோப்
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு - ரோஜா சோப்
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு - எலுமிச்சை சோப்
தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு - வேப்பஎண்ணெய் சோப்பு
சோப்பு பிரிவு வீடியோக்கள்
Online ல் தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு பெற
அணுக வேண்டிய Whatsapp எண்: